மழைக்காக கொட்டகைக்குள் ஒதுங்கிய இளைஞர்கள் இருவர் மின்னல் தாக்கி பலி

 
- தொலைபேசியில் அழைப்பு வந்ததால் அனர்த்தம்

கடும் மழை காரணமாக பாதுகாப்பைத் தேடி மழையில் நனைவதை தவிர்ப்பதற்காக கொட்டகைக்குள் சென்ற இரு சகோதரர்கள் மின்னல் தாக்கி பலியாகியுள்ளனர்.

மொனராகலை, கொணகங்கார பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரத்தரங்கன்ன பிரதேசத்தில் வயல்வெளியில் வேலை செய்துக்கொண்டிருந்த இருவரே பலியாகியுள்ளனர்.

மின்னல் தாக்கத்தினால் இருவர் பலியாகியுள்ளனர். அதிலொருவர் 1990 அம்புலன்ஸ் சாரதி என இனங்காணப்பட்டுள்ளனர்.

அம்புலன்ஸ் சாரதி (வயது 32), திருமணம் முடிக்காத இளைஞன் (வயது 31) ஆகியோரே கடந்த 27ஆம் திகதியன்று பலியாகியுள்ளனர்.

இந்த இரு இளைஞர்கள் உட்பட பலர் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்தபோது, மழை பெய்ததும் அங்கிருந்த கொட்டகைக்குள் சென்றுள்ளனர்.

வயல்வெளியில் வேலைச் செய்துக்கொண்டிருந்த போது கடுமையான மழை பெய்தமையால், அங்குள்ள கொட்டகைக்குள் வந்து இருவரும் அமர்ந்திருந்துள்ளனர். அதில் ஒருவரின் கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு வந்துள்ளது.

அதற்கு பதிலளிக்கும் போதே கடுமையான மின்னல் தாக்கியுள்ளது. அதன் பின்னரே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

அவ்விருவரும் இருந்த கொட்டகை தீப்பற்றி எரிவதை கண்ட, சாரதியின் தாய், கூக்குரல் எழுப்பியுள்ளார். அதன்பின்னர், கிராமவாசிகள் இணைந்து சென்றுள்ளனர். எனினும், அவ்விருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனரென்பது விசாரணைகளின் பின் கண்டறியப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...