சஜித் பிரேமதாஸவே ஜனாதிபதி வேட்பாளர்

S.J.B செயற்குழுவில் ஏகமனதாக முடிவு

ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் (2024) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸாவை களமிறக்கவுள்ளது. கட்சியின் செயற்குழு இது குறித்து ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்  செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எட்டப்பட்டது.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை,எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரான சஜித்பிரேமதாஸா 41.99 சதவீத வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய அரசியல் கட்சியை உருவாக்கி 23.90 சதவீத வாக்குகளைப் பெற்று 54 ஆசனங்களை கைப்பற்றினார். இந்த பெறுபேற்றை தொடர்ந்து சஜித் பிரேமதாஸ எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலுடன் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பெரும்பாலான தரப்பினர் விலகி, ஐக்கிய மக்கள் சக்தி என்ற அரசியல் கட்சியை பிரநிதித்துவப்படுத்தினார். இந்த அரசியல் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமை தாங்குகிறார்.

இவ்வாறான பின்னணியில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை களமிறக்க ஏகமனதாக இக்கட்சி தீர்மானித்துள்ளது.


Add new comment

Or log in with...