ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஜனநாயகம் நிலவிய இடம் தமிழ்நாடு

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்புவிழாவில் பிரதமர் மோடி புகழாரம்

தமிழ்நாட்டில் 900 ஆண்டுகளுக்கு முன்பே ஜனநாயக பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயகத்துக்கு தமிழ்நாட்டின் செங்கோல் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசுகையில் குறிப்பிட்டார். புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்ன்று திறந்து வைத்தார். தொடர்ந்து பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.

"புதிய நாடாளுமன்ற வளாகம் அனைத்து இந்தியர்களுக்கும் பெருமிதம் அளிக்கும். புதிய நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோயில் ஆகும். இந்தியாவின் முன்னேற்றத்தில்தான் உலக நாடுகளின் முன்னேற்றம் இருக்கிறது. புதிய நாடாளுமன்ற கட்டடமானது இந்தியாவின் வளர்ச்சி, உலகின் வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது. இந்தியா புதிய பயணத்தை இன்று தொடங்கி உள்ளது. நாடாளுமன்றத்தில் புனிதமான செங்கோல் நிறுவப்பட்டிருக்கிறது. நேர்மை, நீதிக்கு ஒரு அடையாளமாக செங்கோல் திகழ்ந்தது. ஒருங்கிணைப்பால் செங்கோல் உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டு ஆதீனங்களின் மடாதிபதிகள் ஆசீர்வாதம் வழங்கினர். ஆதீனங்களின் மடாதிபதிகளை வணங்குகிறோம். தமிழ்நாட்டின் செங்கோல் நாம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.

செங்கோல் தற்போதுதான் சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதிகாரம் மாற்றத்திற்கான அடையாளம் செங்கோல். ஆங்கிலேயர் காலத்தில் அதிகாரப்பகிர்வுக்காக அளிக்கப்பட்ட செங்கோலுக்கு உரிய முக்கியத்துவம் அளித்துள்ளோம். புனித செங்கோலின் பெருமையை மீட்டெடுக்க முடிந்தது நமது அதிர்ஷ்டம். 900 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் ஜனநாயக பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அதிகார மாற்றத்திற்கான அடையாளம் செங்கோல். இந்தியாவை உலக நாடுகள் இன்று நன்மதிப்போடு பார்க்கின்றன" என்று மோடிமேலும் கூறினார்.


Add new comment

Or log in with...