இலங்கை கரப்பந்து அணி முதல் வெற்றி

நேபாளத்தில் நடைபெற்று வரும் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளன மகளிர் கரப்பந்தாட்ட சவால் கிண்ணத்தில், கடந்த புதனன்று (24) நடைபெற்ற மாலைதீவுகள் அணிக்கு எதிரான தனது கடைசி குழுநிலை போட்டியை இலங்கை மகளிர் அணி 3–0 என கைப்பற்றி தொடரில் முதல் வெற்றியை பதிவுசெய்தது.

ஆட்டத்தின் முதல் செட்டை 25–18 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிக்கொண்ட இலங்கை மகளிர் அணி, இரண்டாவது செட்டையும் 25–13 என இலகுவாக கைப்பற்றியது.

அடுத்து நடைபெற்ற மூன்றாவது செட்டில் மாலைதீவுகள் அணி சற்று சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதிவரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த செட்டை இலங்கை அணி 26–24 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டியது.


Add new comment

Or log in with...