Friday, May 26, 2023 - 9:04am
பாதுகாப்புச் சேவைகள் றக்பி தொடரில் இலங்கை விமானப்படை சம்பியன் கிண்ணத்தை வென்றது.
கடந்த மே 9ஆம் திகதி தொடக்கம் நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை இராணுவ அணியை 15–13 எனவும் இலங்கை கடற்படை அணியை 23–13 எனவும் விமானப்படை அணி வீழ்த்தியது.
போட்டியில் இறுதி நிகழ்வில் கடற்படை காலாற்படைப்பிரிவின் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் பொன்னம்பெரும பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்த தொடரின் நாயகன் விருதை விமானப்படை அணியின் தலைவர் சிரேஷ்ட வான்படை வீரர் கயந்த இத்தமல்கொட வென்றார்.
Add new comment