- இங்கிரியவில் மோட்டார் சைக்கிள் விபத்து
- மற்றுமொருவர் படுகாயம்
சகோதரியின் திருமண வைபவத்துக்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த 15 வயது சிறுவன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக, இங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹந்தபாங்கொட, கொட்டிகல பிரதேசத்தை சேர்ந்த பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவத் தலைவராக இருந்த பிம்சர பிரபோத் ரணசிங்க என்ற சிறுவனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், பலா மரத்தில் மோதி நின்றதாக சம்பவத்தை நேரில் கண்ட பெண்ணொருவர் தெரிவித்தார்.
விபத்தில் படுகாயமடைந்த சிறுவனும் மற்றைய நபரும் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மாணவன் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Add new comment