தமிழ், முஸ்லிம், மலையக கட்சிகள் எதுவும் பங்கேற்கவில்லை
தமது சேவைக் காலத்தை நிறைவு செய்து கொண்டு ஓய்வு பெற்றுச் செல்லும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் நேற்று சபையில் இடம்பெற்ற பிரேரணையில் தமிழ், முஸ்லிம், மலையக கட்சிகள் எதுவும் பங்கேற்கவில்லை.
ஓய்வு பெற்றுச் செல்லும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவுக்கு பாராட்டு தெரிவிக்கும் பிரேரணை நேற்றுக் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை இடம்பெற்றது. பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க படைக்கல சேவிதரினால் காலை 10.00 மணிக்கு சபைக்குள் அழைத்து வரப்பட்டார். இதன்போது சபைக்குள் இருந்த பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து நின்று மேசைகளில் தட்டி அவருக்கு வரவேற்பளித்தனர்.
சபைக்குள் அழைத்து வரப்பட்ட தம்மிக்க தசநாயக்க தனது பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்குரிய ஆசனத்தில் அமர்ந்தார். அவரின் குடும்பத்தினர், உறவினர்கள் சபாநாயகர் களரியில் அமர்ந்திருந்தனர்.
ஓய்வு பெற்றுச் செல்லும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவுக்கு பாராட்டு தெரிவிக்கும் பிரேரணையில் பிரதமர், அமைச்சர்கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் என பலரும் உரையாற்றினார்கள்.
ஓய்வு பெற்றுச் செல்லும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவின் சேவைகள், திறமைகள், அர்ப்பணிப்புகள், சாதனைகள் தொடர்பில் பலரும் பல்வேறு விடயங்களை தெரிவித்ததுடன், வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.
எனினும், ஓய்வு பெற்றுச் செல்லும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவுக்கு பாராட்டு தெரிவிக்கும் பிரேரணையில் தமிழ், முஸ்லிம், மலையக கட்சிகள் எவையும் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
லோரன்ஸ் செல்வநாயகம்
Add new comment