பிரான்ஸ் உள்நாட்டுக் குறுகிய நேர விமானச் சேவைகளைத் தடை செய்துள்ளது.
கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதே அதன் நோக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ரயிலில் இரண்டரை மணி நேரத்திற்குள் செல்லக்கூடிய இடங்களுக்கு இனி விமானச் சேவைகள் வழங்கப்படமாட்டாது. பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்து ஈராண்டுகளுக்குப் பின்னர் அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறுகிய நேர விமானச் சேவைகள் தடை செய்யப்படுவது கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சிலர் கூறினர்.
உண்மையான தீர்வுகளுக்கு அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டும் என்று ஐரோப்பிய விமான நிறுவனங்களுக்கான தொழில்துறைக் குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.
Add new comment