திருமலை, பாலையூற்றில் 14 வயது மாணவனை வேனில் கடத்த முயற்சி

முகமூடி நபர்களைத் தேடி பொலிஸார் வலை வீச்சு

திருகோணமலை, பாலையூற்றுப் பகுதியில் 14 வயது பாடசாலை மாணவனை வேனில் கடத்திச் செல்ல முயற்சிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக திருகோணமலை பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை, பாலையூற்றில் மாணவர் ஒருவரை சிலர் கடத்த முயற்சித்ததாக திருகோணமலை தலைமையக பொலிஸாருக்கு நேற்று (24) தகவல் கிடைத்துள்ளது.

இந்த மாணவன், சம்பவ தினம் மாலை 4.00 மணியளவில் தனியார் வகுப்பொன்றுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, நீல நிற வேனில் வந்த முகமூடி அணிந்த குழுவொன்று தன்னை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றிச் செல்ல முற்பட்டதாகவும், அவர்களிடமிருந்து தான் தப்பி ஓடியதாகவும் மாணவன் தெரிவித்துள்ளார்.


There is 1 Comment

kidnaping employment members are arrest

Add new comment

Or log in with...