பூஸா சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

காலி, பூஸா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக காலி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மொரட்டுவை லுனாவ பிரதேசத்தைச் சேர்ந்த அசோக ருக்மல் பெர்னாண்டோ என்ற கைதியே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கைதி தினமும் வேலைப் பிரிவில் அமர்த்தப்பட்டு சிறை வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டரென்றும் அவ்வாறு பணியில்  ஈடுபடத்தப்பட்ட அவர் வேலை முடிந்தும் மீண்டும் சிறைக்குள் வரவில்லையென்பதை அறிந்ததும், அவர் தப்பியோடியது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...