பிரபல குறுஞ்செய்தி பகிரும் செயலியான WhatsApp அதன் புதிய பதிப்பில், அனுப்பிய செய்தியை திருத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதற்கமைய, பயனர் ஒருவர் தாம் அனுப்பும் செய்தியை 15 நிமிடங்களுக்குள் திருத்தம் (Edit) செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது குறித்த செய்தி திருத்தப்பட்டது (Edited) என காட்சியளிக்கிறது.
Facebook, Instagram உள்ளிட்ட பிரபல செயலிகளின் தாய் நிறுவனமான Meta வின் கீழேயே WhatsApp உள்ளது.
அதற்கமைய Meta நிறுவனத்தின் நிறுவுனரான மார்க் சக்கர்பேக் இவ்வசதி தொடர்பில் தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றையும் இட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறுஞ்செய்தியை அனுப்பியதும், அதனை திருத்த எண்ணம் தோன்றினால், குறித்த செய்தியை தொடர்ச்சியாக தொடுவதன் மூலம் அதனை தெரிவு செய்து, வலது பக்க மேல் முலையில் உள்ள 3 புள்ளிகளைக் கொண்ட மெனுவிலிருந்து Edit என்பதை தெரிவு செய்து குறித்த செய்தியை திருத்த முடியும் என்பது குறிப்பிடத்த்ககது.
இதற்கு உங்கள் WhatsApp செயலி புதிய பதிப்பிற்கு இற்றைப்படுத்தப்பட்டிருப்பது (Update) அவசியமாகும்.
Add new comment