தாய்லாந்து தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி

தாய்லாந்து பொதுத் தேர்தலில் அந்நாட்டின் கடந்த ஒரு தசாப்த இராணுவ மற்றும் இராணுவ ஆதரவு ஆட்சியை நிராகரித்து சீர்திருத்தவாத எதிர்க்கட்சி அதிக இடங்களையும் அதிக மக்கள் ஆதரவையும் பெற்றுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற தேர்தலின் கிட்டத்தட்ட அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், முற்போக்கான முன் நகர்வு கட்சி மற்றும் பியு தாய் கட்சி 500 ஆசனங்களில் 286 இடங்களை வென்றுள்ளன.

எனினும் 250 உறுப்பினர்களைக் கொண்ட இராணுவம் நியமித்த செனட், பிரதமரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பில் பங்கேற்கும் நிலையில் புதிய அரசு ஒன்றை அமைப்பதில் தொடர்ந்தும் நிச்சயமில்லாத சூழல் இருந்து வருகிறது.

இதில் இளைஞர்களை தலைமையாகக் கொண்டு முதல் முறை தேர்தலில் போட்டியிட்ட முன் நகர்வு கட்சி கீழ் சபையில் அதிக இடங்களைப் பெற்றிருப்பதோடு முன்னால் பிரதமர் சினவாத்ரா மகளின் தலைமையில் போட்டியிடும் பியு தாய் கட்சி சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. எனினும் இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அரச குடும்பம் மற்றும் இராணுவ சார்பு தரப்புகள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன.

இதனிடையே தாய்லாந்துப் பிரதமராகப் பொறுப்பேற்கத் தயார் என்று முன் நகர்வு கட்சித் தலைவரான 42 வயது பிட்டா லிம் ஜரொன்ராட் கூறியுள்ளார்.

ஆட்சி அமைப்பதற்குப் போதுமான எண்ணிக்கை இருப்பதாகவும், ஆட்சி மாற்றம் சுமுகமாக நடைபெறும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.


Add new comment

Or log in with...